வாழ்க்கைப் புத்தகம்!!

என் வாழ்க்கை எனும் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருப்பவன் நீ..!! நகரும் நாட்களில் புரட்டப்படும் பக்கங்களுடன் புரட்டப்படுகிறாய் நீ..!! பக்கங்களில் நிறைந்த நீ பக்கத்தில் வர மறுத்துவிட்டாய்..!! புரிந்தது மெய் பிரிந்தது உறவு.! உள்ளத்தில் நிறைந்த காதல் உயிருள்ள வரை உயிருடன்..!!- யாழ்ரதி - இந்தியா

புரிந்து கொண்டேன் அன்பே..!!

எல்லாமும் எல்லாம் என்னுடனேயே இருக்கிறது..இருந்தும் எதுவும் இல்லாத உணர்வு எனக்குள் வாட்டி வதைக்கிறது..புரிந்து கொண்டேன் அன்பே நீ என் அருகில் இல்லை என்பதை..!! -ரதிஷ்- சென்னை

பழுத்த இலையானேன்!

மரம் தாங்கும் ஆணிவேர் போல உனைத் தாங்கியது என் இதயம்..!! பழுத்த இலை விழுவதைப் போல் நீயின்றி நானும் உதிர்ந்து தரையில் கிடக்கிறேன் கவனிப்பாரற்று..!!-யோகேஸ்வரன்- மலேசியா

பேரிடியும் பெரிதல்ல..!

வாழ்க்கையோடு போராடும் உள்ளங்களுக்கு வானில் தோன்றும் மின்னல் ஏதோ ஒன்றை எளிமையாய் உணர்த்திச் செல்கிறது..!! அது சரியென மழையும் ஆமோதித்தது..! புரிந்து கொண்டால் பேரிடியும் பெரிதல்ல..!- காயத்திரி- ஜேர்மன்

நினைவுகளின் சங்கமம்..!!

நீ வந்து போன நாட்களின் இனிமையினை ஒவ்வொரு நாளும் ரசிக்கிறேன் நீ இல்லாத தருணத்தை எண்ணி தவிக்கிறேன்..!!அடுத்த பிறவியில் இல்லை நம்பிக்கை..!இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு வாழ்கிறேன் இந்த உலகில்..!! -ராதேஷ்- திருச்சி இந்தியா

முட்டி மோதும் சண்டை!

உன்னை மீண்டும் பார்க்க கூடாது என எண்ணுகிறது என் அக கண்..!! எப்படியேனும் ஒரு தடவையாவது பார்த்துவிட முடியாதா என புறக் கண்ணும் முட்டி மோதும் சண்டையில் விழிகள் சிந்துகிறது பனித்துளிகளை..!-ரத்னா- இந்தியா

செயற்கை தேடும் மனிதன்!

மரங்களின் குளுமையை மறக்கும் காலமா இந்தக் காலம்..!!செயற்கை தேடும் மனிதன் இயற்கையின் இனிமையை மறக்கிறான்..!!செயற்கையின் உச்சத்தில் செயல்பட்ட நிகழ்வுகளின் சோகங்கள் மறைவதில்லை..!இயற்கையில் எல்லாம் அடங்கும் செயற்கை எல்லாம் முட(ங்)க்கிடும்! -எழிலரசி- கிளிநொச்சி

வலிசுமந்த மண்ணின் ஆறாத் துயரம்!!!

குண்டுச் சத்தங்களாலும் பிணவாடைகளாலும் மரண ஓலங்களாலும் ரசாயன வாயுவாலும் நிரம்பியிருந்த முள்ளிவாய்க்கால் உணர்வுள்ள தமிழன் மனதின் ஆறாத வடுக்கள்.... அண்ட சராசரம் வரை ஓங்கியொலித்த குரல்களுக்கு செவி சாய்க்கா வுலகின் மெத்தனத்தால் பதுங்கி குழிக்குள் பதுங்கியது பல்லாயிரம் உயிர்கள்... வழி நெடுகிலும் கண்ணீர்க்கோடுடன் வேறு வழியின்றி முட்கம்பிக்குள் முடங்கிய தமிழினத்தின் கனவுகள்...

அன்பின் ஆழம்..!!

தண்ணீரில் இருக்கும் மீனுக்குத் தெரியும் அன்புக்கு வயதெல்லை கிடையாதென்று... ஆனால் மண்ணிலிருக்கும் சில மனிதருக்கு புரிவதில்லை அன்புக்கு ஆழமில்லை என்று.... இருந்தும் தண்ணீரில் மிதக்கிறேன் அன்பின் ஆழத்தை அறிய....                          ...

உன்னோடு என் நினைவு.!

காலங்கள் கடந்து போகலாம் ஆனால் என் காதல் என்றும் உன்னோடு தான்..!! உன் நினைவுகள் தரும் காதல் என்றும் என்னுள் இதமானது..!!-நர்மதா- மானிப்பாய் இலங்கை

தற்போதைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் புதைக்கப்பட்ட கலைஞர் 3 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் இரும்புப் பெட்டிக்குள் 3 நாட்கள் சாலைக்கு அடியில் புதைந்து இருந்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் உள்ள ஹோபர்ட் நகரில் டார்க் மோபோ என்னும் பெயரில் ஆண்டுதோறும் நாடகத்...

தந்தை காட்டியவழி சரியே: கோலி பெருமிதம்

ஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்தார் என இந்திய கிரிக்கெட்...

பிரபல பாடகர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (வயது 20) இனந்தெரியாத மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். நேற்று...

காரில் போகும் போது மேக்-அப் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே போகும் போது ஐ புரோ பென்சில் கண்ணில் குத்தி பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நல்லவேளையாக அவருக்கு கண்பார்வை பாதிக்கப்படவிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண்...

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை சந்திக்காது ஏமாற்றிய மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு காத்திருந்த ஆனந்த சுதாரனின் பிள்ளைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேற்று (18) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற...

அதிகம் பார்க்கப்பட்டவை