அசிங்கமாகத் தொங்கும் தசையை போக்குவது எப்படி?

சருமத்தின் நெகிழ்வுத்தன்மை, கொலாஜன் உற்பத்தியை பொறுத்து அமையும். இது இளம் வயதில் கொலாஜன் அதிகமாக உற்பத்தியாகும். வயது ஆக ஆக, கொலாஜன் குறைய ஆரம்பிக்கும்.

இதனால் சருமம் தளர்ந்து தொங்க ஆரம்பிக்கும். இதனால் மிருதுவான சருமம் தொங்கிப் போய் விகாரமாய் இருக்கும்.

மேலும் அவ்வப்போது எண்ணெயால் கழுத்திலிருந்து முகம் வரை மேல் நோக்கி சின்ன சின்ன மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமின்றி இந்த ரெட்டை நாடியை குறைப்பதற்கு தேன் ஒரு சிறந்த பொருளாக உள்ளதாம்.

தேவையானவை

முட்டையின் வெள்ளைக்கரு- 2
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு- அரை டிஸ்பூன்
வாசனை எண்ணெய்- 10 துளிகள்

செய்முறை

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

அதனுள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு, வாசனை எண்ணெய் ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் நாடியின் அடிப்பகுதி, கழுத்து ஆகிய பகுதிகள் முதலில் ஒரு கோட்டிங்க் அடித்து லேசாக காய்ந்த பின், இன்னொரு கோட்டிங் அடிக்கவும். பின்னர் படுத்துக் கொள்ளுங்கள்.

நன்றாக சருமம் இறுகிப் பிடிக்கும் வரை காயவைத்து பின்பு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சதை அதிகமாக தொங்கினால் வாரம் ஒருமுறை செய்யலாம்.

இல்லையென்றால் 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்யவும். விரைவில் சதை இறுகி இளமையான தோற்றம் தரும்.