அடம் பிடிக்காமல் நடிக்கும் நடிகை!!

தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடிப்பது வாரிசு நடிகையும் லட்சுமிகரமான நடிகையும் தான்.

கதாநாயகியாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படங்களில் வேறு கதாநாயகிகள் இருந்தாலும் கவலைப்படாமல் நடிக்கிறார்.

சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 என்று அந்த வரிசையில் நீயா 2, காட்டேரி படங்களிலும் 2 ஆம் கதாநாயகியாக நடிப்பதற்கு நடிகை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம், சக்தி, ராஜபார்வை, டேனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கன்னிராசி அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.,பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கி‌ஷனுக்கு ஜோடியாக சின்ன குஷ்பு என அழைக்கப்படும் நடிகை நடிக்கிறார்.

அதில், லட்சுமிகரமான நடிகை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கவும் அந்த நடிகை திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.