அடித்தது லக்..: பணம் முக்கியமில்லை என ஆச்சரிய பேட்டியளித்த நபர்!

புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த நபருக்கு லாட்டரியில் €500,000 பரிசு விழுந்த நிலையில் பணத்தை வைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தை சேர்ந்த சார்லி மீஹன் (84) என்பவருக்கு கடந்த 2012-ல் புற்றுநோய் பீடித்திருந்த நிலையில் புற்றுநோயை எதிர்த்து போராடிய நிலையில் அவர் அண்மையில் குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் சார்லி வாங்கி லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக €500,000 விழுந்துள்ளது.

இது குறித்து சார்லி கூறுகையில்,

புற்றுநோயை நான் ஜெயித்த போதே எனக்கு லாட்டரியில் €500,000 பரிசு கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

இருப்பினும் அந்த பணத்தை நான் இந்த வயதில் பெரிய விடயமாக எண்ணவில்லை.

எனக்கு வேண்டியதெல்லாம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு தான். ஆனால் பணத்தால் அதை வாங்க முடியாது என்று கூறியுள்ளார்.