அடுத்தவாரம் 100 மில்லியனைப் பெறும் அதிர்ஷ்டசாலி யார்?

அவுஸ்திரேலியாவின் 80 மில்லியனுக்கான குலுக்கலின் முடிவுகளை அறிவிப்பதில் நேற்று நீண்ட தாமதம் ஏற்பட்டது.

இதற்கு பிரதான காரணம் தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறப்பட்டது. இதனால் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இறுதியில் மிகத் தாமதமாக 80 மில்லியன் Powerball Jackpot-க்கான வெற்றி இலக்கம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் வெற்றியாளர்கள் யாரும் தெரிவாகவில்லை.

இதனால் இந்த சீட்டிழுப்பின் வெற்றித்தொகை அடுத்த வாரத்துக்கு 100 மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் division one இல் ஒருவர் 100 மில்லியன் டொலர்களை வெற்றிபெற்றால் அவுஸ்திரேலிய அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு வரலாற்றில் தனிநபர் ஒருவர் வெற்றிபெற்ற அதிகூடிய தொகை என வரலாற்றில் பதிவாகும்.