அடுத்த ஜென்மத்திலும் நடிகையாக ஆசைப்படும் முன்னாள் நாயகி!

அடுத்த ஜென்மத்திலும் நடிகையாகவே ஆசைப்படுவதாக பூவே பூச்சூடவா நாயகி கூறியுள்ளார்.

தற்போது அவர் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். அவர் தனது சினிமா பயணம் பற்றி ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

’நடிகையாகணும் புகழ் பெறணும்னு நினைத்ததில்லை. சினிமா வாய்ப்புகள் என்னைத் தேடி வர அர்ப்பணிப்புடன் நடிச்சேன். அதுக்குக் கிடைச்ச பிரதிபலன்தான் ரசிகர்களின் அன்பு.

4 வருடம்தான் நடித்தேன். பிறகு கல்யாணமாகி வெளிநாட்டில் குடியேறிவிட்டேன்.

நமக்கான சினிமா கேரியரை இன்னும் நல்லா பயன்படுத்தியிருக்கலாமோன்னு இப்போ நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதனால் என்ன? நான் அதிகம் எதிர்பார்த்த குடும்ப வாழ்க்கை நல்லா போகுதே… ‘உங்க கூட ஜோடியா நடிக்கலாம்னு நினைச்சேன்.

நீங்க, ரொம்ப சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு, சினிமாவுல இருந்து விலகிப்போயிட்டீங்களே. ஏன் இப்படிப் பண்ணீங்க?ன்னு இன்னைக்கு வரை பல ஹீரோக்கள் அன்பாக கேட்கிறாங்க.

அடுத்த ஜென்மத்திலும் நடிகையாக ஆசைப்படறேன். அப்படி நடந்தால், சினிமா வாய்ப்பைத் திறம்பட பயன்படுத்துவேன் எனத் தெரிவித்தார்.