அடுத்த படத்திற்கு தயாரான நடிகர்!

செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சாமி நடிகர் நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியாக தயாராகி வருகிறது. மேலும் கள்ளபார்ட் படத்திலும் சாமி நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை சாமி வெளியிட்டுள்ளார்.

எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

இப்படம் பற்றிய முழுவிவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.