அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுக்கும் நடிகர்!

வெற்றி என்ற வார்த்தையின் மறுபெயரை கொண்ட தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான இரண்டெழுத்து நடிகருக்கு நிரந்தரமான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம்.

நடிகர் தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் தொகையை வாங்கி குவிக்கிறாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி அவர் நடிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

அதுபற்றி கேட்பதற்கு சென்றால், அவரை பார்க்க முடிவதில்லை என்று சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.

குறித்த நடிகர் அட்வான்ஸ்சை வாங்கும் போது இந்த படத்தில் நடிக்க கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான் செக்கை வாங்குவார்.

அவர் நினைத்த மாதிரியே அந்த படத்தில் நடிக்காமல், டிமிக்கி கொடுத்து விடுவார் என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறியதாக செய்திகள் உலா வருகின்றன.

சமீபத்தில் கூட, அவர் படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை என்று அவர் நடித்த படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.