அதிகாரியின் கன்னத்தில் பளார் என்று அறைந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த பிரித்தானிய பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்த போது, இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்துள்ளார்.

இந்த விடயம் குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தமையைத் தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

விசா காலம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் குறித்த பெண்ணை சிறைபிடித்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.