அதிரடி காட்டிய ரோஹித்! மீண்டும் படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்

இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடர் தோல்விய சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது டி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளார். 111 ரன்கள் அடித்தவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

நேற்று லக்னோவில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா 111 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர்.

196 என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதற்கமைய 71 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 11ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.