அதி நவீன தொலைநோக்கி உருவாகிறது!-

சிலி நாட்டில் விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கி உருவாக்கப்பட்டு வருகிறது.

உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் செயல்பட ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படுகிறது.