அமெரிக்க வீராங்கனை புதிய சாதனை

தென்கொரியாவின் Pyeongchang-ல் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு போட்டியில் 17 வயதேயான அமெரிக்க வீராங்கனை Chole Kim தங்கப்பதக்கம் வென்றார்.

அரைவட்ட வடிவிலான பனிச்சறுக்கு தளத்தில் போட்டியிட்ட Chole Kim தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் முன்னணியிலேயே இருந்தார்.

இறுதி வாய்ப்பில் 98.25 புள்ளிகளை குவித்து அவர் சாதனை படைத்தார்.

இதேவேளை சீன வீராங்கனையான Liu Jiayu 93.75 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.