அரசாங்கத்தின் அடுத்த இலக்கு என்ன? வெளிப்படுத்திய அமைச்சர்!

எதிர்வரும் சில மாதங்களில் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாகவே புதிய பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சபாநாயகர் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

நாடாளவிய ரீதியில் ஐந்து இலட்சம் வாழை மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அங்கு இடம்பெற்றது.

விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்திய நாம் பயிர் செய்து நாம் சாப்பிடுகிறோம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் பலாமரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இது முன்னெடுக்கப்படுகிறது.