அரவிந்த் சாமி தொடர்ந்த வழக்கு மனோபாலாவுக்கு நோட்டீஸ்.!

சதுரங்க வேட்டை 2 படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி  திரிஷா நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வாதத்தின் போது அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்று கூறபட்டது.

இதனையடுத்து மனோபாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம் செப்டம்பர் 20ந் திக்திக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.