அரை நிர்வாண போராட்ட நடிகைக்காக இறங்கி வந்த நடிகர்!

அரை நிர்வாண போராட்டத்தை அண்மையில் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

பின்பு பிரபல நடிகர் ராணாவின் தம்பி தன்னுடன் நெருக்கமாக இருந்தார் என புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்காக குரல் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண்.

அண்மையில் பவன் ஹைதராபாத்தில் தன் ஆதரவாளர்களுடன் சிறுமி ஆசிபாவுக்காக அமைதி போராட்டம் நடத்தினார். அப்போது நடிகை ஸ்ரீ ரெட்டி பற்றி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது;

இது போன்ற விசயங்களை சரியானவர்களிடம் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு தன் அதிகாரத்தை கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் ஸ்ரீரெட்டி செய்தி சானல்களில் விவாதத்தில் கலந்துகொண்டு நேரத்தை வீணாக்குவதை விட காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அணுகவேண்டும். செய்தி சானல்களால் தீர்வு கிடைக்காது என்றார்.

TRP க்காக சானல்கள் விசயத்தை உணர்ச்சி வசமாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.