அறிமுகமாகிறது சாரதிகள் இல்லாத பேருந்துகள்!-

சாரதிகளே இல்லாத பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டளவில் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய தூரங்களை நோக்காகக் கொண்டு பயணிப்போரின் நலன் கருதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிங்கபூர் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் நெரிசல் குறைவாக இருக்கும் வீதிகளில் அறிமுகமாகவுள்ள சாரதிகள் இல்லாத பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.