அறிமுகமாகிறது சியோமியின் கேமிங் ஸ்மார்ட்போன்: விலை விபரம் இதோ

சியோமியின் பிளாக் ஷார்க் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிளாக் ஷார்க் 2 6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.32,710) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,780) என்றும்,

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,850) என்றும் ,

டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.