அறிமுகமாகிறது ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச்!

ஹூவாய் தனது வாட்ச் ஜி.டி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் அல்ட்ரா-ஹை பேட்டரி லைஃப் வசசதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் பவர் சேவிங் அல்காரிதம் செயல்திறன் மற்றும் எஃபிஷியன்சி மோட்களின் போது சீராக மின்சக்தியை கையாள்கிறது.

ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED ஸ்கிரீன், டூயல்-கிரவுன் டிசைன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் செராமிக் பெசல்கள் 10.6 எம்.எம். கேசுடன் வருகிறது.

இதில் ஜி.பி.எஸ்., GLONASS மற்றும் GALILEO உள்ளிட்ட நேவிகேஷன் வசதிகளை கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை டிராக் செய்யும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ட்ரூசீன் 3.0 இதய துடிப்பு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் வாட்ச் ஜி.டி. ஸ்போர்ட்ஸ் எடிஷன் விலை ரூ.15,990 என்றும் கிளாசிக் எடிஷன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் விற்பனை மார்ச் 19 ஆம் திகதி அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.