அழகைப் பராமரிக்க இது போதுமே!

சிலருக்கு கூந்தல் வறண்டு அசிங்கமாக காணப்படும். அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது எடுத்து கூந்தலின் மேல் தடவினால், கூந்தலானது அடங்கி, வறட்சியில்லாமல் காணப்படும்.

குறிப்பாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பது போல் வெளிப்படுத்தும்.

வியர்வை நாற்றம் வராமல் இருக்க, அனைவரும் நிச்சயம் டியோடரண்ட் பயன்படுத்துவோம்.

கூந்தலுக்கு ஹேர் டை அடிக்கும் முன், கூந்தல் படும் இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொண்டால், ஹேர் டையினால் சருமத்தில் ஏற்படும் கறைகளைத் தடுக்கலாம்.

இதனை கண்களுக்கு மேக் அப் போடும் முன், கண் இமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி, பின் ஐ ஷேடோவைப் பயன்படுத்தினால், கண்கள் அழகாக காணப்படும்.