அவதானமாயிரு…!!

எதுவும் இல்லாமல்
ஏதிலியாய் வாழ்ந்த
நாட்களை மறந்து
எதற்கு கடனை தின்று
ஏப்பம் இடுகின்றாய்…!!

தூக்கம் மறந்து
துடித்துச் சாகிறாய்..!!

அன்று வாழ்ந்தாயே
இன்று மட்டும் ஏனோ
எப்போதும் எதையும் கொண்டு
வாழப்பழகிய நீயே
பிறகெதற்கு மாய உலகை
மனதில் நிறுத்தி காயப்படுகின்றாய்..!!

கவலை தான் கடனும் கூட களவும்
சேரும் பிறகென்ன மானம் போகும்
சவப்பெட்டியும் உன்னை திட்டும்
இது தேவை என்றால் எவராலும்
உன்னை நிறுத்தமுடியாது எதுக்கும்
அவதானமாயிரு..!!

– தே.பிரியன் –
கிளிநொச்சி