அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் காலமானார்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Bob Hawke இன்று காலமானார்.

தனது 89 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் லேபர் கட்சித் தலைவரான இவர் தனது வீட்டில் இயற்கைமரணம் அடைந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இவரது மரணத்தைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bob Hawke அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பிரதமர்களில் ஒருவர் என பிரதமர் Scott Morrison புகழாரம் சூட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா தனது விருப்பத்திற்குரிய மகனை இழந்துவிட்டது என லேபர் கட்சியின் தற்போதைய தலைவர் Bill Shorten தெரிவித்துள்ளார்.

அஸ்திரேலியாவின் 23வது பிரதமரான Bob Hawke அவர்களது இறுதி நிகழ்வுகள் அடுத்துவரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.