அவுஸ்திரேலியாவில் அதிரடியாக மாற்றப்படும் சட்டம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் அதன் கட்டடச் சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன் 38 மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் விரிசல் சத்தம் வந்ததைத் தொடர்ந்து அதில் வசித்த 300 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்தக் கட்டடத்தின் வடிவமைப்பிலும் கட்டடக் கட்டுமானத்திலும் ஏற்பட்ட பிரச்சினைகள் பாதிப்புகளை ஏற்படுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

அந்தச் சம்பவத்திற்கு பிறகு சிட்னி புதிய மாற்றங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது.

புதிய விதிமுறைகளின்படி, தகுதிபெற்ற பதிவுசெய்துள்ள வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டடக்கலைஞர்கள் ஆகியோர் மட்டும் பணியில் அமர்த்தப்படவேண்டும்.

அவர்கள் செய்யும் வேலைக்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும்.

இதற்கு முன்னர் இருந்த கட்டட விதிகளின்படி கட்டடத்தைக் கட்டுபவர்கள் மட்டும் அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.