அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இலங்கை இளைஞன்! வலைவீசி தேடும் பொலிஸார்

இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இலங்கை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பேர்த் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேர்த் மாநகரின் Langford பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, 28 வயதான ஹரி கனேஷன் என்ற பெயருடைய குறிப்பிட்ட இளைஞர் 179 சென்றி மீற்றர் உயரமும் பருமனான உடலும் கொண்டவராகும்.

அவர் தாக்குதல் நடத்திய ஆயுதத்துடன் தப்பியோடியுள்ளார் என்றும் நம்பப்படுகின்றது. அவரை அணுகுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவரும் தாக்குதலுக்குள்ளானவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களாகும். சம்பவம் இடம்பெற்ற அன்று என்ன நடந்தது என்பது குறித்து தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவரிடம் தாங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் இலங்கையிலிருந்து இரண்டு வயதில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவர் என்று தெரியவருகிறது.