அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உல்லாசம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமையினால் ரசிகர்கள் கடும் வருத்தமடைந்துள்ளனர்.

எனினும் படுதோல்வியடைந்தவுடன் இலங்கை அணி வீரர்கள் தங்கள் தோல்வி குறித்து வெட்கம், வருத்தமின்றி மிகவும் உல்லாசமாக நேரத்தை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்களில் நிறைவடைய வேண்டிய டெஸ்ட் போட்டி 4 நாட்களில் நிறைவடைந்தது. இதனால் மேலதிகமாக இருந்த ஒரு நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடைகளுக்கு சென்று மனைவி மற்றும் காதலிக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

போட்டி நிறைவடைந்த பின்னர் நேற்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விருந்துகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிலர் வீரர்களுக்காக மேலும் சில விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த விருந்தில் மதுவினால் நடத்தப்பட்ட விருந்தாக காணப்பட்டதென கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த விருந்தின் பின்னர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அவுஸ்திரேலிய இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் 7 அரை லட்சம் பணமும் ஒப்பந்த பணத்திற்கு மேலதிகமாக சம்பளப்பமும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.