அவுஸ்திரேலியாவில் கடும்புயல்! 40,000க்கும் அதிகமான மக்களுக்கு ஏற்பட்ட நிலை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடும்புயல் வீசியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இல்லங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

40,000க்கும் அதிகமான மக்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார நிறுவனங்கள் தெரிவித்தன.

போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கின, போக்குவரத்து விளக்குக் கம்பங்கள் உடைந்தன.

இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவை தொடர்பான நிழற்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அடைமழையும் மின்னலும் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கின.

சிட்னியின் சில பகுதிகளில் ஏறத்தாழ 60 மில்லிலிட்டர் அளவு மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.