அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருத்துவர்! வெளியாகிய அதிர்ச்சி காரணம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.

இந்திய மருத்துவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் அவர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த குற்றவியல் உளவியலாளர் கொலைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

32 வயதான ப்ரீத்தி ரெட்டி சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன இவர் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், ஞாயிற்றுக்கிழமை தனது முன்னால் காதலன் ஹர்ஸவர்தன் நாரதேவுடன் தங்கியிருந்துள்ளார்.

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் ஹர்ஸவர்தனேவிடம் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில், மனம் உடைந்த அவர் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.

ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தான், மாநாடு முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்த ப்ரீத்தியை வாட்ஸ் அப் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பி அழைத்து கொலை செய்துள்ளார் ஹர்ஸவர்தன்.

இது ஒரு திட்டமிட்ட கொலை என குற்றவியல் உளவியலாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது, தனது காதலியை விட்டு பிரிந்த பின்னர் ஹர்ஸவர்தனின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் வாராத காதலி வேறு யாருடனும் செல்லக்கூடாது, தன்னை இத்தனை ஆண்டுகளாக காதலித்துவிட்டு தனக்கு கிடைக்காத அவள், வேறு யாருக்கும் கிடைக்ககூடாது.

இது ஒன்று மட்டுமே இந்த கொலைக்கான முக்கிய காரணம் ஆகும். இதனால் திட்டமிட்டு இந்த கொலையை நிகழ்த்தியுள்ளார் ஹர்ஸவர்தன் என உளவியிலாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ப்ரீத்திக்கு தனது முன்னாள் காதலனுடன் பிரிவு ஏற்பட்டதையடுத்து வேறு ஒரு காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இணைந்ததாக தங்கை நித்யா தெரிவித்துள்ளார்.

தற்போது, இருவரும் இறந்துவிட்ட நிலையில் இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.