அவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி!

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது.

அங்கிருந்து எப்படி வெளியேறுவது எனத் திக்குமுக்காடிய நேரத்தில், அற்புதமான யோசனை அவர்களுக்குத் தோன்றியது.

உதவி நாட HELP எனும் வார்த்தையை அவர்கள் சேற்றில் செதுக்கினர். அதன் அருகில் இருந்த பகுதியில் தீ மூட்டினர்.

அந்தச் செயல் பலன் தந்தது. அந்த வழியே பறந்து சென்ற தேடல், மீட்பு விமானம், அந்த வார்த்தையைக் கண்டது.

26 மணிநேரத்துக்கும் மேல் காணாமல்போன இருவரையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.