அவுஸ்திரேலியாவில் ஜப்பான் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!-

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள ஃபிறேஸர் தீவில் உள்ள ஏரியிலிருந்து காணாமல்போன ஜப்பான் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (30) காலை குறித்த ஜப்பான் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய குழுவில் இருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று மாலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையிலேயே குறித்த ஜப்பான் இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஃப்றேஸர் தீவிலுள்ள மெக்கன்சி ஏரியானது வெளிநாட்டவர்களை பெரிதும் கவர்ந்த பிரிஸ்பேனின் பிரபல சுற்றுலா மையமாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.