அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி – பலர் படுகாயம்

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 14) காலை Love Machine எனும் இரவு விடுதிக்கு வெளியில் குழுமியிருந்தவர்களை நோக்கி காரிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதில் 3 பாதுகாவலர்களும் ஒரு வாடிக்கையாளரும் காயமுற்றனர். அவர்களில் ஒருவரான 37 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

28 வயதான மற்றோர் ஆடவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.