அவுஸ்திரேலியாவில் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்க்காட் மோரிசன் (Scott Morrison) அறிவித்துள்ளார்.

தலைமை ஆளுநரைச் சந்தித்த பிறகு, மோரிசன் தேர்தல் பற்றி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை அறிவிக்க, தலைமை ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படுகின்றது.

பிரதமர் மோரிசனும், எதிர்த்தரப்புத் தலைவர் பில் ஷார்டனும் (Bill Shorten) கடந்த வாரம் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

கடந்த வாரமே, தேர்தல் பற்றி அறிவிக்கப்படும் என்ற ஊகம் நிலவியது.