அவுஸ்திரேலியாவில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்! மற்றுமொரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை முயற்சி

சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று அதிகாலை 4.20 மணியளவில் சிட்னி விலவூட் தடுப்புமுகாமுக்கு அவசர உதவி வழங்குவதற்கான Ambulance அழைக்கப்பட்டு குறித்த நபர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

27 வயதான ஆப்கான் பின்னணி கொண்டவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்தார்.

இந்தநிலையில் விலவூட் தடுப்பு முகாமில் தொடர்ச்சியாக தற்கொலை முயற்சிகளும் மரணங்களும் இடம்பெற்றுவருவதைச் அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பிலும் தடுப்பு முகாம் தொடர்பிலும் சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.