அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்! மடக்கி பிடித்த பொலிஸார்

அவுஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களுக்குச் சந்தேகத்திற்குரிய பொட்டலங்களை அனுப்பிவைத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயது நபர் ஒருவரையே அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். விக்டோரியா மாநிலத்தின் நாட்டுப் புறத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

மெல்பர்னில் உள்ள சில தூதரகங்கள் சந்தகேத்திற்குரிய பொட்டலங்களைப் பெற்ற சில மணி நேரத்தில் அந்த நபர் பிடிபட்டுள்ளார். மெல்பர்ன், கான்பரா, சிட்னி ஆகியவற்றில் உள்ள தூதரங்களுக்கு அவர் மொத்தம் 38 பொட்டலங்களை அனுப்பிவைத்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

29 பொட்டலங்களைக் கைப்பற்றிய பொலிஸார் அவை யாருக்கு அனுப்பப்பட்டன என்பதையும் அடையாளம் கண்டுள்ளனர்.

எஞ்சியுள்ள 9 பொட்டலங்களால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லையென்றும் அவர்கள் கூறினர். சந்தேக நபர் மெல்பர்ன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.