அவுஸ்திரேலியாவில் பாரிய வெள்ளம்! பல்லாயிரம் உயிர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து பகுதிகளில் பெய்த கனத்த மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில், பல்லாயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இரண்டு வாரம் தொடர்ந்து பெய்த மழையால், குவீன்ஸ்லந்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெள்ளம் பெரும்பாலும் வடிந்துவிட்டதால், வெள்ளத்தால் நேர்ந்துள்ள பாதிப்புகள் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன.

அதில் நூறாயிரக் கணக்கான கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் வருத்தம் தெரிவித்தார்.

பல இடங்களில் கால்நடைகள் சேற்றில் சிக்கி உயிரிழந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏராளமான பறவைகளும், கங்காருகளும் மழையில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட குவீன்ஸ்லந்து தற்போது கனத்த மழையால் நல்ல நீர்வளத்தைப் பெற்ற போதும் தொடர்மழை அம்மாநிலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.