அவுஸ்திரேலியாவில் பாரிய தீ விபத்து! இலங்கை தமிழ் அகதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் திரட்டப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதுடன், தீயை கட்டுப்படுத்துவதற்கு 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தீயணைப்பு வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்ற விக்னேஷ், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.