அவுஸ்திரேலியாவில் 4000 பேரை பலியெடுக்க காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் Flu, மிக அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தோடு அவுஸ்திரேலியாவில் வழக்கம்போல Flu பரவத்தொடங்கியுள்ளது.

அதற்கமைய இவ்வருடம் குறைந்தது நாலாயிரம் பேரையாவது பலியெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் Flu தாக்கம் நினைத்துப்பார்க்கமுடியாதளவு வீச்சடைந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றது.

கடந்த வருடம் மார்ச் மாதம் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 3173 என்றும், இந்தவருடம் மார்ச் மாதம் பத்தாயிரம் பேராக பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

நாட்டு மக்கள் அனைவரையும் தவறாது Flu தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை வட்டாரங்கள், இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் அதிகம் தாக்குவதாகவும் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளன.

Flu ஏற்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுகின்ற பத்து நோயாளிகளில் ஒருவர் என்ற வீதத்தில் மரணம் நிகழ்வதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதுவரை Flu தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை விவரம் மாநிலங்கள் ரீதியாக –

NSW: 7,595

Queensland: 7,289

Victoria: 4,627

South Australia: 4,397

Western Australia: 1,498

Tasmania: 322

Northern Territory: 296

ACT : 203