அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்த முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை!

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்களை மூவரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளது.

மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு ஆட்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட 34 பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்களில் 8 பெண்கள் உட்பட 24 இலங்கையர்களும் அடங்குவதாக மலேசிய பொலிஸ் மா அதிபர் சிறி முகமட் பியுஜி ஹருன் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்காரர்கள் படகொன்றை கொள்வனவு செய்துள்ளனர். அத்துடன் மூன்று படகு இயந்திரங்களை கொள்வனவு செய்ய முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்து தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்களை கைது செய்துள்ளோம். இவர்களே ஆட்கடத்தலில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்தாண்டின் நடுப்பகுதி முதல் மலேசியாவை தளமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முறியடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.