அவுஸ்திரேலியாவை அதிர வைத்த பொட்டலங்களில் இருந்தது என்ன? வெளியாகிய அதிர்ச்சி தகவல்

அவுஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களுக்கு சந்தேகத்திற்குரிய 38 பொட்டலங்களை அனுப்பி வைத்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

49 வயதான சவாஸ் அவான் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் ஆபத்தான பொட்டலங்களை அஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார். அந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.

மெல்பர்னில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரங்கள் உட்பட 12க்கும் அதிகமான வெளியுறவு அலுவலகங்களுக்கு சந்தேகத்திற்குரிய பொட்டலங்களை அவான் அனுப்பி வைத்தார்.

38 பொட்டலங்களில் 29 பொட்டலங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எஞ்சியவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோயை உண்டாக்கும் Asbestos எனப்படும் கல்நார் அந்தப் பொட்டலங்களில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேறெந்தக் கூடுதல் தகவல்களையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.