அவுஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத்தீ! 100 கட்டடங்கள் எரிந்து சேதம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக எரியும் காட்டுத்தீ இதுவரை 30க்கு மேற்பட்ட வீடுகளையும் சுமார் 70 கட்டடங்களையும் எரித்துச் சேதப்படுத்தியுள்ளது.

தீ இன்னமும் எரிந்துகொண்டிருப்பதாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அவுஸ்திரேலியா அனல்காற்றின் காரணமாக இம்மாதத் (மார்ச்) தொடக்கத்திலிருந்தே வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கிறது.

விக்டோரியா மாநிலத்தில் 100,000 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் தீக்கிரையாகியுள்ளது.

இந்த வாரத்தின் இறுதியில் வானிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 இடங்களில் மூண்ட தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்களுக்கு அது ஓரளவு உதவும் என்று நம்பப்படுகிறது.