அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட்! இலங்கை வீரரின் கழுத்தை பதம் பார்த்த பந்து

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்து கழுத்தில் தாக்கியதால், அவர் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கன்பெர்ரா மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் போது, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் வீசிய பந்து, திமுத் கருணாரத்னவின் கழுத்தை தாக்கியது.

இதனால் வலியால் துடித்த அவர். மைதானத்தில் சரிந்தார். இதனையடுத்து அணி மருத்துவர் வந்து அவரை பரிசோதிக்க, பின்னர் மெடிகெப் வரவழைக்கப்பட்டு அவர் ஓய்வறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

ஆனால், அவரது நிலை மோசமாக இருந்ததால், அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

எனினும், செல்லப்படுவதற்கு முன்னர், அவர் கண் விழித்து இருந்ததாக கூறப்படுகின்றது.

அவரின் நிலைக் குறித்து இன்னமும் உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், தற்போது அவருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுத் கருணாரத்ன, 85 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்த நிலையிலேயே களத்தை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.