அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஷேன் வோர்ன் பிறந்தநாள்.!

ஷேன் கெய்த் வோர்ன் என்பவர் முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் அணித்தலைவர் ஆவார்.

துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார்.

மேலும் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் விசுடன் சர்வதேச முன்னணி துடுப்பாட்ட வீரராக ஷேன் வோர்னை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.

2000 இல் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் இவர் பன்னாட்டுத் துடுப்பாடப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீராராகவும் உள்ளார்.

அனைத்துவிதமான துடுப்பாட்ட வடிவங்களில் இருந்தும் சூலை, 2013 இல் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்றைய தினம் ஷேன் வோர்ன் தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.