அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விபரீதம்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கணினிக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கணினிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன விதமான இணையப் பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்தது என்பதைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

நாடாளுமன்ற, அரசியல் நடைமுறைகளைப் பாதிக்கும் முயற்சியாக ஊடுருவல் சம்பவம் இருக்கக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல்களையும் பயனீட்டாளர்களையும் பாதுகாப்பது முதன்மை நோக்கம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றக் கடவுச்சொற்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு நிலையம் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.