ஆக்ஷனில் களமிறங்கும் த்ரிஷா மற்றும் சிம்ரன்

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து த்ரிஷா மற்றும் சிம்ரன் ஆகியோர் ஆக்ஷன் நிறைந்த சாகச படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகை த்ரிஷா, சிம்ரன் மற்றும் பிரசாந் நடிப்பில் வெளியாகிய ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டு சுமார் 16 ஆண்டுகள் முன்னணி நடிகையாக த்ரிஷா வலம் வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷா மற்றும் சிம்ரன் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தனர். இருப்பினும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறையாகத்தான் இருந்தது.

இதனை நிவர்த்திசெய்யும் முகமாக தற்பொழுது புதுமுக இயக்குனர் சனந்த் இயக்கும் ஆக்ஷன் கலந்த சாகச படத்தில் இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.