ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு!

முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது நல்லது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் எடை கூடும். முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் நன்றாக சாப்பிடலாம்.

காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.