ஆலாபனை!

ஒரு விடியலுக்காய் தவம் கிடந்து
வீணானது என் இரவு!

ஒரு புதினத்திற்கு
காத்திருந்து
புண்ணானது என் பொழுது!

ஒரு கானலை எதிர்பார்த்து
வறண்டு போனது என் தாகம்!

ஒரு நிலவுக்கு
வலை போட்டு
நிழலானது என் நினைவு!

ஒரு காதலிக்காக
நடந்து முடமானது
என் இதயம்!

கல்லொருவை பாரிஸ்