ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அவுஸ்திரேலியா வெற்றி

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 5வதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி SCG மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் 4-0 என்ற கணக்கில் தொடரையும், ஆஷஸ் கோப்பையையும் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

Usman Khawaja, Shaun Marsh, Mitchell Marsh, Steven Smith ஆகியோர் முறையே 171, 156, 101, 83 ஓட்டங்களை பெற்றனர்.