ஆஸி. வதிவிட உரிமைபெற்ற வெளிநாட்டவர்கள் தாய்நாடு சென்றபோது கைது?

அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றுக்கொண்ட 17 சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர், சீன இரகசியப்படையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது.

தங்களது உறவினர்களை காண்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் பலரது மனைவிமார் மற்றும் குழந்தைகள் அவுஸ்திரேலிய குடியுரிமையுடைவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் நால்வர் வீட்டுக்காவலிலும் ஏனையோர் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது.

சீன அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டும் Uighur சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வதிவிட உரிமை பெற்ற பின்னரும் நாட்டுக்கு திரும்பும்போது கைது செய்யப்படுகிறார்கள் என்றும் தடுத்துவைக்கப்படுகிறார்கள் என்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயரந்த Uighur சமூகத்தவர்கள் கன்பராவில் முறையிட்டிருக்கிறார்கள்.

இதன்பிரகாரம் சீனாவில் காணமல்போயுள்ள – கைதுசெய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலிய வதிவிட உரிமைபெற்றவர்கள் குறித்த சம்பவங்களை விசாரிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.