இடமாற்றத்தால் மனமுடைந்த வங்கி ஊழியர் எடுத்த வீபரீத முடிவு! திருகோணமலையில் சம்பவம்

வங்கி இடமாற்றத்தினால் மனமுடைந்த அரச வங்கி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலையைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கை வங்கியில் கடமையாற்றிய ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கணவர் மற்றும் உறவினர்கள், இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு தற்காலிகமாக மொரவெவ இலங்கை வங்கிக்கு இடமாற்றம் கிடைத்தது.

இந்த காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கியதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.