இட்லி போண்டா செய்வது எப்படி?

இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள் :

இட்லி – 5
கடலைமாவு – 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி
பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பின்பு அடுப்பில் வாணிலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும். இப்போது சுவையான இட்லி போண்டா ரெடி.

குறிப்பு :

மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.