இணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 பியூர் வியூ மாடல் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் QHD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, HDR10 வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.