இணையத்தில் வைரலாகும் நடிகர் விக்ரமின் புது கெட்டப் வீடியோ!

விக்ரம் நடித்து வரும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்கி வருகின்றார்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

மேலும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விக்ரம் வெளிநாட்டில் இருக்கின்றார்.

அங்கிருந்து அவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் விக்ரமின் புதிய லுக்கை பார்த்த விக்ரம் ரசிகர்கள் விக்ரமின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.